சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக்கு கெஞ்சுவது அதிமுக தான், நாங்கள் அல்ல என்று தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை :
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்த நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக – தேமுதிக கூட்டணி 4 கட்ட பேச்சுவார்த்தை முடிந்தும் இன்னும் இழுபறியில் உள்ளது. ஏற்கனவே நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு” எனத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எல்.கே.சுதீஷ் பதிவு செய்து சர்ச்சையானது. அதேபோல், விஜயகாந்தின் மகன் பிரபாகரன் 234 தொகுதியிலும் தனியாக நின்று ஜெயிப்போம் என்று கூறியதும் பெறும் பேச்சு பொருளானது.
Read more – மக்கள் நீதி மய்ய கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் நானே… சரத்குமாருக்கு நன்றி தெரிவித்தேன் தான்னே..
இந்தநிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணிக்காக கெஞ்சுவது அதிமுகதானே தவிர தேமுதிக அல்ல’ என அக்கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்திருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




