பங்கீடு எங்கே ? 12 தொகுதி கொடுத்த அதிமுக.. பதறிய தேமுதிக…

அதிமுக – தேமுதிக தொகுதி பங்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சென்னை :

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்த நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே அதிமுக கட்சி பாட்டாளி மக்கள் கட்சியுடன் 23 தொகுதிகளை பங்கீடு செய்துள்ளது.

இதைத்தொடர்ந்து தேமுதிகவுடன் நடந்த முதல் கட்ட பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் விஜயகாந்தை சந்தித்து 12 தொகுதிகள் ஒதுக்குவதாக கூறப்பட்டது. அதனைத்தொடர்ந்து நடந்த 2 ம் கட்ட பேச்சுவார்த்தையில் 15 தொகுதிகள் வரை தருவதாக அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more – தமிழர்களை தமிழர்கள் தான் ஆளவேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புவார்கள் : குமரியில் ராகுல் காந்தி பேச்சு

பாமக கட்சிக்கு 23 தொகுதிகள் கொடுக்கப்பட்ட நிலையில் தேமுதிக சார்பில் குறைந்தது 20 தொகுதிகள் கெடுக்கப்பட்டதாகவும், விஜயகாந்த் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் இந்த தேர்தலில் போட்டியிடாததால் அதிமுக மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் அதிமுக கட்சி தேமுதிகவை 3 கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோது தேமுதிக புறக்கணித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலின் போது அமைக்கப்பட்ட கூட்டணி இதற்குப்பிறகு நிலைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Exit mobile version