சென்னை நீலாங்கரை வாக்குச்சாவடிக்கு மிதிவண்டியில் வந்து நடிகர் விஜய் வாக்களித்தார்.

சென்னை :
மிழகத்தில் இன்று 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தமிழகத்தில் மொத்தமாக 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு கொரோனா பரவலில் இருந்து மக்களை பாதுகாக்க சமூக இடைவெளியும் கடைபிடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
பல திரை பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் வரை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் வாக்கு அளித்து வருகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவானது இன்று இரவு 7 மணி வரை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு மிதிவண்டியில் வந்து நடிகர் விஜய் வாக்களித்தார். தற்போது, நடிகர் விஜய் மிதிவண்டியில் வந்து வாக்களித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.




