யாரெல்லாம் கொரோனா தடுப்பூசி செலுத்தக்கூடாது : தமிழக சுகாதாரத்துறை விளக்கம்

கொரோனா தடுப்பூசி யாரெல்லாம் செலுத்தவேண்டும், செலுத்தக்கூடாது என தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தினமும் ஒரு லட்சத்துக்கு 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது எண்ணிக்கையை உயர்த்த தமிழக சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில், 2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கவும், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Read more – அரியர் மாணவர்களுக்கு கடைசி 3 வாய்ப்பு வழங்கிய அண்ணா பல்கலைக்கழகம்..

மேலும், 45 வயது மேற்பட்ட அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று விளம்பரம் படுத்தப்பட்டு வரும் வேளையில் யாரெல்லாம் கொரோனா தடுப்பூசி செலுத்தக்கூடாது என்ற தகவலையும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் நேற்று வெளியிட்டார்.

அதன் அடிப்படையில், கர்ப்பிணி பெண்கள், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், தற்போது கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவோர் நிச்சயம் கொரோனா தடுப்பூசி செலுத்தக்கூடாது என்று தெரிவித்தார்.

Exit mobile version