சென்னை அண்ணாநகரில் ஆக்சிஜன் உற்பத்தி கலன் அமைக்க திட்டம் : தமிழக சுகாதாரத்துறை

சென்னை அண்ணாநகர் புறநகர் மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி கலன் அமைக்க திட்டமிட்ட பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒரேநாளில் இந்த கொடூர கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் இட பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை போன்ற முக்கிய காரணங்களால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

Read more – கொரோனா மையத்தில் தீடிரென பற்றிய தீவிபத்து… 12 பேர் உயிரிழந்த பரிதாபம்…

இந்தநிலையில், இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது ; சென்னை அண்ணாநகர் புறநகர் மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி கலன் அமைக்க திட்டமிட்ட பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், 1 நிமிடத்திற்கு 150 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கலனை சோதனை முறையில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version