வீட்டில் நின்ற வாகனத்திற்கு சுங்கச்சாவடியில் இருந்து பணம் எடுக்கப்பட்டு உள்ளதாக வந்த குறுஞ்செய்தி பார்த்து உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

சிவகங்கை :
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜகம்பீரம் கிராமத்தில் வசித்து வருபவர் கமர் ரகுமான். இவருக்கு சொந்தமான 4 சக்கர வாகனம் ஒருவாரமாக தனது வீட்டில் நிறுத்தி வைத்துள்ளார். இந்தநிலையில், மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் இருந்து இவருக்கு பணம் எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த கமர் ரகுமான் உடனடியாக ஆதாரத்துடன் சுங்கச்சாவடிக்கு சென்றுள்ளார்.
Read more – நடிகர் சிவகார்த்திகேயன் உதவியால் தான் எனது மருத்துவக்கனவு நிறைவேறியது : மருத்துவக்கல்லூரி மாணவி பெருமிதம்
சுங்கச்சாவடி மேலாளரை சந்தித்து இதுகுறித்து விசாரிக்க, அவர் எனக்கும் சம்பந்தமும் இல்லை. நாங்கள் இதற்கு பொறுப்பும் இல்லை என்று தெரிவிக்க அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், இதே போல் கமர் ரகுமான் வாங்கி கணக்கில் இருந்து அடிக்கடி பணம் எடுக்கப்படுகிறது எனவும், எனவே இந்த சுங்கச்சாவடியை கண்காணித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையில் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
இதேபோல், மானாமதுரை வாடகை கார் ஓட்டுனர்களும் ஒரே நேரத்தில் 3 முறை வசூல் செய்வதாகவும் ஏற்கனவே புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.




