தமிழக இடைக்கால பட்ஜெட்… ஓ. பன்னீர் செல்வம் இன்று தாக்கல்…

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் அறிக்கையை இன்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தாக்கல் செய்ய இருக்கிறார்.

சென்னை :

தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதம் 24 ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் இன்று தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல் அறிக்கையை தமிழக துணை முதல்வர் மற்றும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார்.

தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அதிமுக சார்பில் மக்களை கவரும் நோக்கில் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவின் கடந்த 10 ஆண்டு ஆட்சி காலத்தில் தமிழக அரசின் கடன் சுமை சுமார் 1 லட்சம் கோடியை தொட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா கால நிவாரணம் மற்றும் பொங்கல் பரிசு என தமிழக அரசு சார்பில் வாரி இறைக்கப்பட்டது.

Read more – இன்றைய ராசிபலன் 23.02.2021!!!

கடந்த 2016 ல் தமிழக அரசின் கடன் 2 லட்சத்து 52 ஆயிரத்து 431 கோடியாக இருந்த நிரையில், 2020-2021 கணக்கெடுப்பின் படி 4 லட்சத்து 56 ஆயிரம் கோடியாக இருந்து வருகிறது. மேலும், கூட்டுறவு கடன் ரத்து, பயிர் கடன் போன்ற பல்வேறு திட்டங்களை கணக்கில் கொண்டால் தமிழக அரசின் சுமை மேலும் மேலும் அதிகரிக்கும் என்பது மாற்றமே இல்லை.

Exit mobile version