வாக்கு எண்ணும் மையத்திற்கு மேல் பறந்த ட்ரோன்.. தேர்தல் அதிகாரிகளுக்கு திமுக தொண்டர்கள் கொடுத்த கடைசி வார்ன்…

நாகை வாக்கு எண்ணும் மையத்திற்கு மேல் ட்ரோன் பறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி வரும் மே 2 ம் தேதி 75 மையங்களில் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், தமிழகம் முழுவதும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டு, 24 மணி நேர சிசிடிவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் வேளையில், பாதுகாப்பு சரியில்லை என்று தொடர்ந்து திமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் கோவை, தென்காசி, திருவள்ளுர் போன்ற வாக்கு எண்ணும் மையங்களில் சிலர் வாகனங்களில் அத்துமீறி செல்வதாகவும் குற்றசாட்டுகள் எழுந்து வருகின்றனர். போலீஸ் வாகனங்களையும் உள்ளே விட மறுத்ததாகவும் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Read more – கொரோனா தொல்லைக்கு பயந்து மருத்துவமனைக்கு வந்தால் எலி தொல்லை… அலறும் கொரோனா நோயாளிகள்..

நாகை தெத்தி பகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தின் மேலே ட்ரோன் கேமரா பறந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் திமுக தொண்டர்கள் ஒன்று கூடி தேர்தல் அதிகாரிகளை முற்றுகையிட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது திமுக தொண்டர்கள் அதிகளவில் கூடிவருவதால் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

Exit mobile version