நிபுணத்துவம் இல்லாத அதிகாரிகளை தீர்ப்பாயங்களுக்கு நியமிப்பது ஏன் ? உயர் நீதிமன்றம் கேள்வி..

தீர்ப்பாயங்களில் போதிய அனுபவம் இல்லாத ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிப்பது ஏன் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் இருந்த நிபுணத்துவ உறுப்பினர்கள் பதவிக்கு ஓய்வுபெற்ற தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், ஓய்வுபெற்ற வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி அருண்குமார் வர்மா ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

தேசிய பசுமைத் தீர்ப்பாய சட்டப்பிரிவின்படி நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்யப்பட கூடிய நபருக்கு 15 ஆண்டுகள் இந்திய ஆட்சிப்பணி அனுபவத்தில், அதில் 5 ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் பணியாற்றிய அனுபவமும் இருக்க வேண்டும். ஆனால், கிரிஜா வைத்தியநாதனுக்கு 15 ஆண்டுகள் இந்திய ஆட்சிப்பணி அனுபவம் இருந்தால் கூட 3 ஆண்டுகாலம் மட்டுமே சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் பணியாற்றியுள்ளார்.

இந்தநிலையில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கிரிஜா வைத்தியநாதனுக்கு சுற்றுச்சூழலில் போதிய அனுபவம் இல்லை என்று வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து கடந்த 10 ம் தேதி வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வு குழு தற்காலிகமாக கிரிஜா வைத்தியநாதன் பணி நியமனத்திற்கு தடை விதித்து ஏப்ரல் 16 ம் தேதி வழக்கை ஒத்திவைத்தனர் .

Read more – கொரோனாவிற்கு பயந்து வேப்பிலையுடன் சுற்றிய மாநில தகவல் ஆணையர்… வைரலாகும் புகைப்படம்…

இதையடுத்து, இன்று மீண்டும் இந்த வழக்கானது விசாரணைக்கு வந்தபோது, தீர்ப்பாயங்களில் போதிய நிபுணத்துவம் இல்லாத ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. மேலும், மத்திய, மாநில அரசுகள் சார்பில் கிரிஜா வைத்தியநாதன் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தபோது, நீதிபதிகள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

Exit mobile version