ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பெரும்பாலான கட்சிகள் அனுமதி..

ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என்று பெரும்பாலான கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஆக்சிஜன் சிலிண்டர், வென்டிலேடர்கள் இல்லாமல் பல ஆயிரம் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நாள் ஒன்றுக்கு 500 டன் ஆக்ஸிஜன் தயாரிக்கும் வசதிகள் உள்ளது என்றும், எனவே இடை தற்காலிகமாக ஆக்சிஜன் தயாரிப்பு பணிகளுக்காக ஆலை இயங்க அனுமதிக்க வேண்டும் வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தமிழக அரசே ஆலையை ஏற்று நடத்தலாம் என்று தெரிவித்தது. இதுதொடர்பாக, பிற கட்சிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். இந்த கூடத்தில் தூத்துக்குடி எம்.பி கனிமொழி திமுக சார்பில் கலந்துகொண்டார்.

Read more – 2021 – 93 வது ஆஸ்கர் விருது வென்றவர்கள் பட்டியல் இதோ…

அப்பொழுது, தமிழக அரசு சார்பில் அரசின் உயர்மட்ட குழு கண்காணிப்பின்கீழ் ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை அனுமதிக்க வேண்டும் என்று பிற கட்சிகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு சம்மதம் தெரிவித்த திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மனிதாபிமான அடிப்படையில் ஆக்சிஜன் உற்பத்தியை தவிர, ஸ்டெர்லைட்டில் வேறு எந்த உற்பத்தியும் நடைபெறக்கூடாது என்று தெரிவித்து அனுமதி அளித்தனர்.

மேலும் ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டால் தென் தமிழகத்திற்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கையும் முன் வைக்கப்பட்டது.

Exit mobile version