கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை கல்வியல் கல்லூரிக்கு மாற்றம் செய்ய கல்லூரி கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கலைக் கல்லூரிகளில் M.Ed., NET, SLET அல்லது Ph.D படித்து முடித்து வேலை பார்த்து வரும் உதவி பேராசிரியர்கள் மற்றும் இணை பேராசிரியர்களை கல்வியியல் கல்லூரிகளுக்கு பணியிடை மாற்றம் செய்ய கல்லூரிக் கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.
இதைதொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு ஏற்றவாறு, மேற்குறிப்பிட்ட விவரங்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் பேராசிரியர்களுடைய விவரங்களை கல்லூரிகளில் இருந்து வாங்கி நாளைக்குள்(25-08-2020) மின்னஞ்சல் வழியாக சமர்ப்பிக்க வேண்டும் என, அனைத்து மண்டல கல்வி இணை இயக்குனர்களுக்கு கல்லூரிக் கல்வி இயக்குநர் பூரணச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.