உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீடு பட்டியல்!

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்கான இட ஒதுக்கீடு பட்டியல் முழுமையாக தயாரிக்கப்பட்டு நேற்று வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் அவற்றின் தாய் மாவட்டங்களான, செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருபத்தூர், வேலூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை செப்டம்பர் 15க்குள் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது,
அண்மையில் வாக்காளர்கள் பட்டியலை வெளியிடப்பட்டது. நேற்று அனைத்து கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டது.

இந்நிலையில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், கிராம ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான இடஇதுக்கீடு பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், `செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி பட்டியலின பெண்களுக்கும் ,

தென்காசி, ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கும், நெல்லை, வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி பொதுப்பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Exit mobile version