தமிழகத்தில் திட்டமிட்டபடி பிளஸ் 2 பொதுத்தேர்வு.. தீவிர ஏற்பாட்டில் பள்ளி கல்வித்துறை..

தமிழகத்தில் திட்டமிட்டபடி பிளஸ் 2 பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என தகவல் கிடைத்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் 11 ம் வகுப்பு வரை தேர்வின்றி தேர்ச்சி தமிழ்நாடு அரசு அறிவித்தது. மேலேயும், 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே எழுந்தது. ஏற்கனவே பள்ளி கல்வித்துறை சார்பில் 12 ம் வகுப்பு மாணவ – மாணவியருக்கான பொதுத்தேர்வு மே 3 ம்தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

Read more – 9 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு… மாநில தகவல் ஆணையம் பரிந்துரை..

இந்தநிலையில், நேற்று 12 ம் வகுப்பு மாணவர்கள் எவ்வாறு பாதுகாப்புடன் செய்முறை தேர்வு மேற்கொள்ள வேண்டும் என்ற ஆலோசனையை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்தாலும் மே 2 தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, அதற்கு அடுத்த நாள் திட்டமிட்டபடி 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற தகவல் கிடைத்துள்ளது. மேலும். அதற்கான தீவிர ஏற்பாட்டில் பள்ளி கல்வித்துறை செயல்பட்டு வருகிறது.

Exit mobile version