அண்ணா பல்கலைக்கழகம் அளித்த அடுத்த ஆபர்.. ஆன்லைன் தேர்வில் புத்தகம் பார்த்து எழுத அனுமதி..

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஆன்லைன் பருவத்தேர்வில் மாணவர்கள் புத்தகம் பார்த்து எழுத அனுமதிக்க பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சென்னை :

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்திவருகிறது. இதுவரை நடந்த ஆன்லைன் 3 ஆன்லைன் பருவத்தேர்வுகளில் பெரும்பாலான மாணவர்கள் தோல்வியுற்றது அதிர்ச்சியளித்தது. இதையடுத்து ஆன்லைன் தேர்வில் மாற்றம் கொண்டு வர அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

Read more – கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற தொண்டர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் : முக ஸ்டாலின் வேண்டுகோள்

அதன் அடிப்படையில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள பருவ தேர்வில் பாடங்களை புரிந்து பதிலளிக்கும் வகையிலும், நேரடியாக கேள்விகளுக்கு பதிலளிக்ககூடிய வகையிலும் புத்தகத்தை பார்த்து எழுத மாணவர்களுக்கு அனுமதி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் வழக்கம்போல் ஒருவரி பதில் அளிக்கும் முறை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த புதிய தேர்வு முறை இறுதி பருவ மாணவர்கள் தவிர பிற ஆண்டு மாணவர்களுக்கும் மட்டும் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Exit mobile version