தமிழக அரசின் கடன் ரூ. 5. 7 லட்சம் கோடியாக உயர்வு : துணை முதல்வர் தகவல்

தமிழக அரசின் கடன் ரூ. 5. 7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை :

தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதம் 24 ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு 2021-22 நிதியாண்டின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் அறிக்கையை தமிழக துணை முதல்வர் மற்றும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

Read more – பதஞ்சலிக்கு பாசம் காட்டுகிறதா பா.ஜ.க ? இந்திய மருத்துவ சங்கம் சரமாரி கேள்வி

இந்த பட்ஜெட் அறிக்கையில் தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 2021-22-ஆம் ஆண்டிற்கான வருவாய் பற்றாக்குறை ரூ.41,417.30 கோடியாக இருக்கும் எனவும், மூலதன செலவினம் 14.41 சதவீதம் ஆக உயர்ந்து ரூ.43,170.61 கோடியாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து வரும் 2021-22ம் கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் 6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளார்.

Exit mobile version