கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற தொண்டர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் : முக ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்களை காப்பாற்ற தொண்டர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலின் 2 ம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. தமிழக அரசு சார்பில் இந்த தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றனர். கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரமாக கடந்து வருகிறது. இதனால் சுகாதாரத்துறை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.

இந்தநிலையில், கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற தொண்டர்கள் தீவிரமாக பணியாற்றிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது : ஒன்றிணைவோம் வா என்ற மக்கள் இயக்கம் மூலம் மாநிலம் முழுவதும் கழக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஒன்றிணைந்து பசுரக் குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடந்த ஆண்டை போல் இந்தாண்டும் வழங்க வேண்டும் என்றார்.

Read more – ஊரடங்களால் கொரோனா தடுப்பூசி போடும் பணி பாதிக்கக்கூடாது… மாநில அரசுக்கு கோரிக்கை வைத்த மத்திய அரசு..

மேலும், கபசுரக் குடிநீர் வழங்கும்போது மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்குக் கழக நிர்வாகிகள் உரிய அனுமதியை பெற்றுக்கொண்டு தனிமனித இடைவெளி, முகக் கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக கடைப்பிடித்து பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கவேண்டும் என்று தெரிவித்தார்.

Exit mobile version