வேளச்சேரியில் கொட்டும் மழையில் தேர்தலில் வாக்குகளை கொட்ட சொல்லி பிரச்சாரம்..

வேளச்சேரி 92 ம் எண் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவை கொட்டும் மழையில் வேட்பாளர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டமன்ற தேர்தல் நடந்த ஏப்ரல் 6 ம் தேதி இரவு வேளச்சேரி தொகுதிக்கு உள்ள வாக்குச்சாவடி எண் 92 ல் வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டுச்சாவடி மையத்தில் இருந்து 3 ஊழியர்கள் வாக்குப்பதிவு எந்திரத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றதால் அந்த 3 ஊழியர்களும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர்.

அங்கு எடுத்துவந்த வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது என்றும், அதில் 15 ஓட்டுகள் பதிவாகி இருந்ததாகவும் மறுவாக்குப்பதிவு குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாகு தெரிவித்தார்.

இந்தநிலையில், வேளச்சேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 92 ல் வரும் 17 ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுவாக்குப்பதிவின் போது இடது கை நடுவிரலில் அழியா மை வைக்கப்படும் என்றும் மொத்தம் 548 ஆண்கள் வாக்களிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Read more – ஒடிசா காங்கிரஸ் வேட்பாளர் கொரோனா பாதிப்பால் மரணம்.. இடைத்தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..

இதையடுத்து, மறுவாக்குப்பதிவு நடைபெறும் அந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மாலை வரை அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. எனவே அவர்களின் வாக்குகளைப் பெறும் வகையில் அரசியல் கட்சியினர் கொட்டும் மழை என்று பாராமல்  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version