ஒத்தையாக கெத்து காட்டி திமுகவின் 10 தொகுதிகளை தட்டித்தூக்கிய தனியொருவன்… அதிமுகவிற்கு அடித்த ஜாக்பாட்…!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட 10 தொகுதிகளிலும் அதிமுக அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெறும் என்பது உறுதியாகியுள்ளது.

ரஜினி மக்கள் மன்றத்தில் செல்வாக்குமிக்க மாவட்ட செயலாளர்களில் ஒருவராக வலம் வந்தவர் ஜெ.ஜெயகிருஷ்ணன். காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளராக பல்வேறு சமூக சேவைகளை செய்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக கல்வியில் பின்தங்கிய விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு பள்ளிகளை தத்தெடுத்து மாணவர்களுக்கு கல்வி சேவையாற்றியுள்ளார்.

ரஜினியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட ஜெயகிருஷ்ணன், அவருடைய ரஜினி மக்கள் மன்றத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, கடந்த 3 ஆண்டுகளாக ஒருங்கிணைந்த காஞ்சி, செங்கை மாவட்ட செயலாளராக செயல்பட்டு வந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கொள்கை மற்றும் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக பல்வேறு சமூக சேவைகளை செய்துள்ளார். பெரும்பாக்கம், சிட்லம்பாக்கம் ஏரிகளை தூர்வாருதல், கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தது என ரஜினி மக்கள் மன்றம் சார்பில் சமூக அக்கறையுடன் பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளார்.


இந்நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது உடல்நிலை காரணமாக அரசியலில் ஈடுபட முடியாமல் போனது. இதையடுத்து, மக்கள் முதல்வர்,எளிமையின் சிகரம் எடப்பாடி பழனிசாமி அவர்களின் சிறப்பான ஆட்சியில், குடிமராமத்து பணிகள் மூலம் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு, விவசாயிகளுக்கு முறையாக தண்ணீர் கிடைத்தது. 24 மணி நேர மின்சாரம், ரவுடிகள் தொந்தரவு இன்றி, சிறந்த சட்டம் ஒழுங்கு பின்பற்றும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. இதனால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ஜெயகிருஷ்ணன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து செயல்பட தொடங்கினார்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பல்வேறு சமூக நலப்பணிகளை மேற்கொண்டு வந்ததால் ஜெயகிருஷ்ணனுக்கு அந்த இரு மாவட்டங்களிலும் செல்வாக்கு அதிகம். எனவே காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட 10 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் படி மிக முக்கிய பொறுப்பு ஜெயகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூரைத் தவிர காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்குட்பட்ட செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம், உத்திரமேரூர், பல்லாவரம், தாம்பரம், சோழிங்க நல்லூர், காஞ்சிபுரம், செய்யூர் ஆகிய 9 தொகுதிகளும் திமுகவின் கோட்டையாக விளக்கி வந்தன. ஆனால் ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து, அதிமுகவில் இணைந்த ஜெ. ஜெயகிருஷ்ணனின் தீவிர பிரச்சாரமும், அவருக்கு ஆதரவாக ரஜினி மக்கள் மன்ற ஆதரவாளர்கள் நடத்திய வாக்கு சேகரிப்பும், அதிமுகவின் வாக்கு வங்கிகளை பலப்படுத்தியது. அதன் பயனாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளும் தற்போது அதிமுகவின் கோட்டையாக மாறியுள்ளது. ஜெயகிருஷ்ணனின் பிரச்சாரம் சமூக வலைத்தளங்களிலும் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியது. ஏற்கனவே அப்பகுதி மக்களுக்கு இவர் செய்த சேவைகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து, அதிமுகவிற்கு கணிசமான வாக்குகளை பெற்று தந்துள்ளது. இதனால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட 10 தொகுதிகளிலும் அதிமுக அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெறும் என்பது உறுதியாகியுள்ளது.

Exit mobile version