இரவு நேர ஊரடங்கின் போதும் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் கூட இரவு நேரத்தில் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தமிழக அரசு சார்பில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றனர். கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்து 10 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இந்தநிலையில், நாளை முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதால் இரவு நேர போக்குவரத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

மேலும், இரவு நேர பயணத்திற்கு ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தால் அதனை காலை பயண நேரத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, இரவு நேர போக்குவரத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது போல ரயில் பயணத்திற்கு இந்த தடை செல்லுபடியாகுமா ? அவ்வாறு செயல்பட்டால் பயண டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு மாற்று என்ன என்ற கேள்வி எழுந்தது.

Read more – முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி..

இதனையடுத்து இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்தாலும் இரயில்கள் வழக்கம் போல் இயங்கும் எனவும், பயண டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவேண்டும் எனவும் தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

Exit mobile version