கடந்த 105 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஜனவரி மாதம் அதிகளவு மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை :
வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று திடீரென்று மழை வெளுத்து வாங்கியது. இந்தநிலையில் கோயம்பேடு, வடபழனி, ஈக்காட்டுதாங்கல், திருமங்கலம், பெரம்பூர், அண்ணாநகர்,அம்பத்தூர், திருவான்மியூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வருகிற 11 மற்றும் 12 ம்தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.
Read more – கங்குலி மாரடைப்பு விவகாரம் : ஃபார்ச்சூன் எண்ணெய் விளம்பரம் நிறுத்தம்
இந்தநிலையில், கடந்த 1915 ம் ஆண்டுக்கு பிறகு, சென்னையில் ஜனவரி மாதத்தில் நேற்று அதிகளவு மழை பெய்து இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 105 ஆண்டுகளுக்கு பின் அதிக அளவு மழை பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




