ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் இன்றைய போட்டியில் மோதல் : ராஜஸ்தான் முதல் வெற்றியை பதிக்குமா…!!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் இன்றைய போட்டியில் மோதுகின்றன.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்திய உற்சாகத்துடன் இந்த ஆட்டத்தில் களம் காணுகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா (72 ரன்), ஷிகர் தவான் (85 ரன்) ஆகியோர் கடந்த ஆட்டத்தில் அரைசதம் அடித்து அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். ரிஷாப் பண்ட் (12 பந்தில் 15 ரன்) கடைசி வரை களத்தில் நின்று அணி எளிதில் வெற்றி இலக்கை கடக்க வைத்தார். பந்து வீச்சில் கிறிஸ் வோக்ஸ், அவேஷ் கான் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.

ராஜஸ்தான் அணியை பொருத்தவரை பென் ஸ்டோக்ஸ் விலகியது அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. அத்துடன் ஆர்ச்சரும் இல்லாதது அணியை மேலும் பின்னடைவாகவே உள்ளது. கேப்டன் சஞ்சு சாம்சன் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். மற்ற பேட்ஸ்மேன்களான பட்லர், வோரா, பராக் ஆகியோர் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆல்ரவுடண்டர் ராகுல் திவாட்டியா இன்றைய ஆட்டத்திலும் எதிரணியை மிரட்டுவார் என எதிர்பார்க்கலாம்.

இளம் கேப்டன்களை கொண்ட இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுவதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணிகளும் 22 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் டெல்லி அணி 11 வெற்றிகளையும், ராஜஸ்தான் அணி 11 வெற்றிகளையும் குவித்து சமபலத்துடன் மும்பை ஆடுகளம் பேட்டிங்குக்கு அனுகூலமாக இருக்கும் என்பதால் 200 ரன்கள் கூட பாதுகாப்பான ஸ்கோராக இருக்காது. எனவே இரு அணிகளும் அதிக ரன் குவிக்க முனைப்பு காட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் ரன் மழைக்கு பஞ்சம் இருக்காது.

Exit mobile version