பஞ்சாப் – மும்பை அணிகள் இன்றைய போட்டியில் மோதல்…பஞ்சாப் தோல்வியிலிருந்து மீளுமா…?

பஞ்சாப் – மும்பை அணிகள் இன்றைய போட்டியில் மோதுகின்றன பஞ்சாப் தோல்வியிலிருந்து மீளுமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் அணி மும்பையை எதிர்கொள்கிறது. சென்னை சேப்பாக்கத்தில் இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதலாவது ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சிடம் தோல்வியை தழுவியது.

அடுத்த ஆட்டங்களில் 10 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சையும், 13 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்சையும் வீழ்த்தியது. கடந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சிடம் பணிந்தது. அந்த ஆட்டத்தில் அமித் மிஸ்ராவின் சுழலில் சிக்கிய மும்பை அணி 9 விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்து முடங்கியது. கடந்த 4 ஆட்டங்களில் வெறும் 35 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கும் ‘ஆல்-ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா முதுகுவலி பிரச்சினை காரணமாக பந்து வீசாமல் இருப்பதும் மும்பை அணிக்கு சற்று பின்னடைவாக உள்ளது.

Read more : மண மேடையில் காத்திருந்த மணமகளின் திருமணம்… குப்பையில் கிடந்த நகையால் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!!

ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் களமிறங்கும் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் அடுத்த வெற்றியை பெற போராடுவார்கள் என்பதால் இப்போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இரு அணிகளும் பலம் வாய்ந்ததாக இருந்தாலும் நிலையற்ற ஆட்டத்தையே இதுவரை வெளிப்படுத்தி வருகிறது.

Exit mobile version