ஐ.பி.எல். எலிமினேட்டர் சுற்றில் ஹைதராபாத் – பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன.
அபுதாபியில் இன்று நடக்கும் ஐ.பி.எல். போட்டியின் எலிமினேட்டர் ரவுண்டில், பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கும் முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், இதுவரையிலும் ஐ.பி.எல்.-ல் கோப்பையை வெல்லாத 4-வது இடத்தில் இருக்கும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதவுள்ளன.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெறும் என்பதாலும், தோல்வியடையும் அணி போட்டியை விட்டு வெளியேறும் என்பதாலும், இந்தப் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைதராபாத்
- புள்ளிபட்டியலில் 7-வது இடத்தில் இருந்த ஹைதராபாத் அணி, 3-வது இடத்தைப் பிடிக்கக் கடுமையாக போராடியது.
- ஹைதராபாத், கடைசியாக ஆடிய 3 ஆட்டங்களிலும் அசத்தலான வெற்றி பெற்று, 3-வது இடத்துக்கு முன்னேறியது.
- மேலும், இந்த மூன்று வெற்றிகளுமே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ள ஜாம்பவன்களான டெல்லி, பெங்களூரு மற்றும் மும்பை அணிகளுக்கு எதிராக கிடைத்தவை என்பதுதான் ஹைலைட்டே.
ஹைதராபாத்தின் ஷைனிங்க் ஸ்டார்ஸ் :
பேட்டிங்
- டேவிட் வார்னர் – 529 ரன்
- மனிஷ் பாண்டே – 380 ரன்
- சஹா – 214 ரன் (4 ஆட்டத்தில்)
- வில்லியம்சன் – 200 ரன்
பெளளிங்க்
- ரஷித்கான் – 19 விக்கெட்
- டி.நடராஜன் – 14 விக்கெட்
- சந்தீப் ஷர்மா – 13 விக்கெட்
பெங்களூரு
- பெங்களூரு அணி, அது விளையாடிய முதல் 10 போட்டிகளிலும் 7-ல் வெற்றிப் பெற்றது.
- ஆனால், இந்த அணி ஆடிய கடைசி 4 ஆட்டங்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளது.
பெங்களூருவின் ஷைனிங்க் ஸ்டார்ஸ் :
பேட்டிங்
- தேவ்தத் படிக்கல் – 472 ரன்
- விராட் கோலி – 460 ரன்
- டி வில்லியர்ஸ் – 398 ரன்
பெளளிங்க்
- யுவேந்திர சாஹல் – 20 விக்கெட்
- மொகமத் சிராஜ் – 9 விக்கெட் (8 ஆட்டத்தில்)
- வாஷிங்டன் சுந்தர் – 8 விக்கெட்
2020 ஐ.பி.எல்-ல் இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த ஆட்டங்களில், இரண்டு அணிகளுமே தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கவுள்ளது.