ஹாக்கி தேசிய விளையாட்டு அல்ல- உச்ச நீதிமன்றம்

இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கியை அறிவிக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது. இந்தியாவிற்கு என தேசிய விளையாட்டு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாக்கியை தேசிய விளையாட்டு என அறிவிக்க வேண்டுமென்று ஒடிசாவின் முதல்வர் நவீன் பட்நாயக், பிரதமர் நரேந்திர மோடிக்கு சில வாரங்களுக்கு முன்னர் கடிதம் எழுதியிருந்தார்.

அவரது கடிதத்தில் அடுத்த ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் வருகிற நவம்பர் மாதம் ஒடிசாவில் நடைபெற உள்ளது. இந்தியாவின் தேசிய விளையாட்டு என அனைவராலும் அறியப்படும் ஹாக்கி இதுவரை தேசிய விளையாட்டு என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து நீங்கள் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் மனநிலையை புரிந்து கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். ஹாக்கிக்கு நமது தேசிய விளையாட்டாகவும் தகுதி உள்ளது. இந்தியாவை உலக அளவில் பெருமைப்பட செய்த ஹாக்கி வீரர்களுக்கு அது ஒரு சிறந்த மரியாதையாக இருக்கும். மேலும் எதிர்கால சந்ததியினரை ஊக்குவிக்கும், தேசிய விளையாட்டு ஹாக்கி என அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

Exit mobile version