இரு ஆட்டங்கள் : டெல்லி – பஞ்சாப் அணிகளும், பெங்களூர் – கொல்கத்தா அணிகளும் இன்றைய போட்டியில் மோதல்…!!

டெல்லி – பஞ்சாப் அணிகளும், பெங்களூர் – கொல்கத்தா அணிகளும் இன்றைய போட்டியில் மோதுகின்றன.

ஐபிஎல் தொடரில் இன்று இரு போட்டிகள் நடைபெறுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி, இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கு இடையே 27 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், கொல்கத்தா 15 போட்டிகலிலும், பெங்களூரு 12 போட்டிகளிலும் வென்றுள்ளன.

மும்பையில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில், டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளுக்கும் இடையே இதுவரை 26 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் பஞ்சாப் அணி 15 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி அணியை எதிர்கொள்ளவுள்ள பஞ்சாப் அணியின் பலம் பலவீனம் குறித்து பார்க்கலாம்.

பிஷ்னோய், ஹென்ரிக்ஸ் டெல்லிக்கு எதிராக களமிறங்க வாய்ப்பு இமாலய ஸ்கோர். அதிரடி சிக்ஸர் மழை என சீசனில் களமிறங்கிய முதல் போட்டியில் அமர்க்களப்படுத்திய பஞ்சாப் கிங்ஸ் இரண்டாவது போட்டியில் சென்னையின் பந்து வீச்சில் சுருண்டது. அணியின் முன் வரிசை வீரர்கள் சிறு பின்னடைவைச் சந்தித்துள்ளனர். இருப்பினும் கே.எல்.ராகுல், கெய்ல், ஹூடா, மயங்க் அகர்வால் என அணியின் முன்வரிசை வீரர்கள் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கும் வல்லமை கொண்டவர்களாகவே பார்க்கப்படுகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த ஹாரூக்கான் மத்திய வரிசையில் அணிக்கு அதிரடியாக உருவெடுத்துள்ளார். பந்து வீச்சைப் பொறுத்தவரையில் இந்தியாவின் death over specialist ஷமியின் அனுபவம் அசுர பலமாக பார்க்கப்படுகிறது. அவருக்கு பக்க பலமாக கூடுதல் death over specialist ஆக உருவெடுத்துள்ளார்.

பந்து வீச்சில் அனுபவ சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். அமித் மிஸ்ராவுக்கு பதில் களமிறக்கப்பட்ட லலித் யாதவ் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்கள் ஆவேஷ் கான், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் ஆறுதலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Exit mobile version