ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரஹானே சதம் அடித்து அசத்தியுள்ளார்.

மெல்போர்ன்:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.அதனை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணியில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்களையும், அஸ்வின் 3 விக்கெட்களையும் கைப்பற்றி இருந்தனர்.

அடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் பெற்று இருந்தது.புஜாரா 7 ரன்களுடனும், சுப்மன் கில் 28 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இன்றைய 2 வது நாள் ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 45 ரன்களில் வெளியேற, அடுத்தடுத்து புஜாரா மற்றும் விஹாரி அவுட் ஆகி வெளியேறினர். மறுமுனையில் ரஹானே மற்றும் ஜடேஜா ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கேப்டன் ரஹானே 195 பந்துகளில் சதம் அடித்து அசத்த, இந்திய அணி 2 வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் பெற்று 82 ரன்களுடன் முன்னிலையில் உள்ளது.
ரஹானே 104 ரன்களுடனும், ஜடேஜா 40 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் உள்ளனர்.





