செப். 25-இல் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் சங்கத்தினர் செப்டம்பர் 25-இல் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

வேளாண் சட்டம் அமலில் வந்ததிலிருந்து அந்த சட்டம் பெரிதாக மக்களிடையே ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதற்க்கு எதிராக பல போராட்டங்கள் நடந்து வருகிறது.

தற்போது அதற்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் சங்கத்தினர் செப்டம்பர் 25-இல் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் தில்லியில் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 9 மாதங்களாக ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு விதமான போராட்டத்தை முன்னெடுத்து வரும் போராட்டக் குழுவினர் வருகின்ற செப்டம்பர் 25ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

முன்னதாக, மத்திய அரசுடன் விவசாயிகள் சங்கத்தினர் நடத்திய 12 கட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version