சசிகலா தேர்தலில் போட்டியிடுவது குறித்து சட்டரீதியான முயற்சிகளை எடுத்து வருகிறோம் என்று அமமுக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் :
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, அதிமுக கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் உள்ளிட்ட சிலர் பேசுவதற்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
நம்ம ஊரில் ஊத்தி கொடுப்பது என்ன குலத்தொழிலா? யாரோ உளறுவதற்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கொள்ளை கூட்டத்தை சேர்ந்த கொள்ளையர்கள் அடுத்தவர்களை கொள்ளையர்கள் என்று தான் கூறுவார்கள். அதுபோல், ஊத்தி கொடுப்பவர்கள் அடுத்தவர்களை ஊத்தி கொடுப்பவர் என்று தானே சொல்லுவார்கள்.
இனிமேல் நான் யாருக்கும் அடிமையாக இருக்க மாட்டேன் என்று கூறினால் அவர்கள் ஏற்கனவே அடிமையாக இருந்தார்கள் என்பது தானே அர்த்தம் என்று தெரிவித்தார். அ.ம.மு.க வின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது என்றும், சசிகலா தேர்தலில் போட்டியிடுவது குறித்து சட்ட ரீதியாக சில முயற்சிகளை எடுத்து வருகிறோம். அதில் வெற்றி பெற்று சசிகலா தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார்.




