மோடி வருகைக்கு மெட்டு அமைத்த பா.ஜ.கவினர்.. வாங்க மோடி.. வணக்கங்க மோடி..

கோவைக்கு வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக ‘வாங்க மோடி வணக்கங்க மோடி’ என்ற பாடலை தமிழக பா.ஜ.கவினர் வெளியிட்டுள்ளனர்.

கோவை :

தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்கு பிரதமர் மோடி இன்று மாலை கோவை வருகிறார். கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசுகிறார்.

இந்தநிலையில், அவரை கொங்கு பாஷையில் வரவேற்கும் விதமாக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் முயற்சியில் கலை இலக்கிய பிரிவின் உமேஷ்பாபு ‘ஆர்கெஸ்ட்ரா’ சண்முகம் இணைந்து பாடல் வரிகளை தயாரித்துள்ளனர்.

Read more – மு.க. ஸ்டாலினை போல் பேசி வம்பிழுத்த டிடிவி தினகரன்…

”வாங்க மோடி வணக்கங்க மோடி.. கொங்கு மக்கள் வரவேற்போம் கூடி.. நீங்க தந்த திட்டங்கள் கோடி..’’ என்ற 3 நிமிட பாடலை தயாரித்துள்ளனர். காணொளியின் முதல் வரியை தமிழக பா.ஜ. க தலைவர் எல். முருகன் தொடங்கி வைப்பது போல ஆரம்பித்து வானதி ஸ்ரீனிவாசன், அண்ணாமலை, சி.டி. ரவி உள்ளிட்ட பலரும் இணைந்து பாடலை வெளியிட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் மோடியின் வருகைக்கு பலரும் ‘ GO BACK MODI ‘ என்ற ஹாஸ்டேக் ட்ரெண்ட் ஆகும் நிலையில் தமிழக பா.ஜ.கவினர் பாடலை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version