முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி கூறிய இலங்கை அகதிகள்…

பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதற்க்காக தமிழக வாழ் இலங்கை அகதிகள் முகாம் மக்கள் சார்பில் எங்களின் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என இலங்கை வாழ் அகதிகள் தங்களின் நன்றியை ஸ்டாலின் அவர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இலங்கை தமிழர்களின் முகாம்களில் மிகவும் பழுதடைந்துள்ள நிலையில் உள்ள 7 ஆயிரத்து 469 வீடுகள் 231 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டித்தரப்படும்.

மாணவர்களுக்கு கல்வி உதவி, இலவச காஸ் அடுப்பு என, பல்வேறு நலத்திட்டங்களை சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அவரது அறிவிப்புக்கு தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் வரவேற்றுள்ளனர்.

இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின், தி.மு.க., மகளிர் அணி செயலரும், துாத்துக்குடி எம்.பி., யுமான கனிமொழிக்கு, எட்டையாபுரம் தாப்பாத்தி இலங்கை அதிகள் முகாம் தலைவர் ஆனந்தராஜ் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர்.

அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:கடந்த ஜூன் மாதம் 22ம்தேதி கனிமொழி, தாப்பாத்தி இலங்கை அகதிகள் முகாமிற்கு வந்தார். கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார்.பின் வீடு, வீடாக சென்று மக்களின் குறைகளை கேட்டார். அவர்கள் வசிக்கும் வீடுகளையும் பார்வையிட்டார். அவர்கள் குறை தீர்க்கும் வண்ணம் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார்.

எங்கள் கோரிக்கை மனுவை கனிமொழியிடம் தந்தோம். அவர் முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தார். அதன் அடிப்படையில் சட்டசபையில் இலங்கை அகதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக வாழ் இலங்கை அகதிகள் முகாம் மக்கள் சார்பில் எங்கள் நன்றியை முதல்வர் ஸ்டாலின், கனிமொழி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

Exit mobile version