டெல்லியில் பாஜக எம்.பி-க்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!

பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், டெல்லியில் பாஜக எம்.பி-க்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

டெல்லியில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. இக்கூட்டமானது டிச.23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கூட்டம் தொடங்கிய முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், டெல்லியில் பாஜக எம்.பி-க்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு, நாடாளுமன்றத்தை முடக்கி வரும் நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version