ரெம்டெசிவிர் மருந்தை பெற இணையதளம் அறிவிப்பு..!

கொரோனா நோயாளிகளுக்கு பலனளிக்கும் ரெம்டெசிவிர் மருந்தை ஆன்லைனில் பெறுவதற்கான இணையதளத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன. வைரஸின் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து நல்ல பலன் அளிப்பதாக கூறப்படுகிறது. இதனால் சென்னையில் உள்ள கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் நோயாளிகளின் உறவினர்கள் குவிந்து வருகின்றனர். கூட்டத்தினால் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் என எண்ணிய தமிழக அரசு ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கிற்கு மாற்றியது. அங்கும் ஏராளமானோர் குவிந்ததால் கோரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.

இதனிடையே கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஏற்ப ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டதுடன், அரசு சார்பில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படாது என்றும் கூறப்பட்டது. ஆனால், ரெம்டெசிவிர் மருந்தை இணைய தளம் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் ரெம்டெசிவிர் மருந்து பெறுவதற்கான இணையதள முகவரியை தமிழக அரசு அறிவித்துள்ளது. ரெம்டெசிவிர் தேவைப்படும் தனியார் மருத்துவமனைகள் http://ucc.uhcitp.in/form/drugs என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து அதனை பெறலாம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா நோயாளிகளின் இறப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version