12 வயது சிறுமியால் திறந்து வைக்கப்பட்ட மேம்பாலம்…

மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மனோகர்லால் கட்டார் தலைமையில் பா.ஜ., – ஜே.எம்.எம்., கூட்டணி ஆட்சி நடைபெறும் அரியானா மாநிலத்தில் இந்த போராட்டம் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனால் இந்த மாநிலத்தில் யாரும் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள், வி. ஐ. பி. கள் யாரும் அங்கு இப்போது அந்த மாநிலத்திற்கு செல்ல தடை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் அனைவரும் சாலை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவதால் மற்றவர்கள் யாரும் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜின்ட் மாவட்டம் பண்டு பின்டாரா கிராமத்தில் ஜின்ட் – சோனிப்பட் சாலையில் புதிதாக மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. மேலும் அது திறக்கும் தருவாயில் உள்ளது.

பாலம் கட்டப்பட்டு 10 நாட்கள் கழிந்தும் அரசியல் தலைவர்கள் யாரும் சாலை மறியலால் உள்ளே வராததால் மேம்பாலம் இன்னும் திறக்கப்பட உள்ளது.

இதைத் தொடர்ந்து கிராம மக்கள் அனைவரும் கலந்து உரையாடி 12 வயது சிறுமியான குஷிலகராவை வைத்து பாலத்தை திறந்துள்ளனர்.

Exit mobile version