நாளை முதல் சூடுபிடிக்கப்போகுது… தீயாய் முடிவெடுத்த எடப்பாடி!

Edappadi Palaniswami

Edappadi Palaniswami

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில், நாளை முதல் தன்னுடையை பிரச்சாரத்தை தொடங்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

தமிழகத்தில் நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சிஉள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக 6 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், 64 ஆயிரத்து 299 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனுக்கள் மீது நாளை பரிசீலனை நடைபெற உள்ளது. மேலும், வேட்புமனுக்களை திரும்பப்பெற வரும் 25-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக தமது கூட்டணி கட்சிகளுடனும், பாமக, தேமுதிக, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தனித்தும் களம் காண்கின்றன.

இதனால் தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், பிற கட்சி தலைவர்களை எல்லாம் முந்திக்கொண்டு முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நாளை முதல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். முதல் நாளில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் தொடங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் வரும் 25ம் தேதி முதல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version