மாஸ்க்கை எப்படி சுத்தப்படுத்தி, பராமரித்து, பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி சில வழிமுறைகளை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
கொரோனா வந்ததும் வந்துச்சு, இப்ப மாஸ்க் போடாத ஆளே இல்லனு சொல்ற அளவுக்கு, மாஸ்க் நம்மில் ஒருவரா மாறிடுச்சு. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள, அரசும், சுகாதாரத் துறை அமைப்பும் சொல்வதெல்லாம், வெளியில் செல்லும் போது மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும், கைகளை அடிக்கடி சோப் போட்டு கழுவ வேண்டும் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே.
இதில் கைகளை கழுவுதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் இரண்டும் செய்து விடலாம் என்றாலும், வெளியில் செல்லும் போதெல்லாம் மாஸ்க் அணிய வேண்டுமானால், ஒருவர் எத்தனை மாஸ்க் தான் வாங்க முடியும் என்று பலரும் யோசித்து வந்தனர். அதுவே ஒரு வீட்டில் 5 முதல் 6 பேர் வரை இருந்தால், மாஸ்க் வாங்கியே ஆண்டியாகப் போக வேண்டியதுதான் என்று பலரும் கிண்டலடித்து வந்தனர். ஆனால், இப்போ நிலைமை அப்படியே மாறி, கலர் கலரா, அதுவும் டிரஸ்க்கு மேட்சா போடுற மாதிரி துணியிலேயே மாஸ்க் வந்திடுச்சு.
இப்ப அடுத்த சந்தேகம் என்னனா, மாஸ்க் எப்படி பராமரிப்பது என்பதுதான். அதற்கான சில வழிமுறைகளப் பத்தி தான், இதுல பார்க்கப் போறோம்.
வழிமுறைகள்
1. நீங்க வெளிய போட்டுட்டு போற மாஸ்க வீட்டுக்கு வந்ததும், கை பொருக்குற அளவு வெதுவெதுப்பான தண்ணீரில, சோப் போட்டுக் துவச்சிடுங்க. சோப் பவுடர்-ல ஊற வைக்கலாம் வேண்டாம்.
2. துவச்ச மாஸ்க்க நல்லா, வெயில்ல படுற மாதிரி காய வைக்கணும்.
3. வெயில்ல காய வைச்ச மாஸ்க்க, ஒரு சுத்தமான பிளாஸ்டிக் கவர் இல்லனா அதுக்குனு தனியா ஒரு பாக்ஸ்ல, தூசி படாத மாதிரி மடிச்சு வைங்க.
4. நீங்க போடுற மாஸ்க, உங்க மூக்கு, வாய் மற்றும் கன்னம் எல்லாத்தையும் மறைக்குதானு செக் பண்ணி பாருங்க. அப்படியில்லனா அந்த மாஸ்க்க குப்பயிலப் போட்டு விடுங்க.
5. மாஸ்க்க குப்பயிலப் போடும் போது, அத இரண்டா கத்திரிக்கோல் வச்சு வெட்டி போடுங்க. ஏன்னா, இப்ப சிலர் குப்பைல கிடக்குற மாஸ்க எடுத்து குறைஞ்ச விலைக்கு விற்குறாங்கனு செய்தி எல்லாம் வருது. நம்ம மட்டும் பாதுகாப்பா இருந்தாப் போதும்னு நினைக்காம, மத்தவங்களையும் பாதுகாக்க இந்த ஒரு சிறு உதவிய செய்யுங்க.
6. மாஸ்க் போடுறதுக்கு முன்னாடி, அது நல்ல சுத்தமான மாஸ்க் தானானு செக் பண்ணிக்கோங்க.
7. மாஸ்க் ஈரமா இருந்தா, அத உபயோகப்படுத்த வேண்டாம்.
8. மாஸ்க் போடுறதுக்கு முன்னாடி, கைகளை சோப், இல்லனா சானிடைசர் வச்சு நல்லாக் கழுவிக்கோங்க.
9. மூச்சுவிட கஷ்டமா இருக்குற மாஸ்க பயன்படுத்தாதீங்க.
10. உங்க குடும்பத்துல ஒவ்வொருவருக்கும் தனிதனியா மாஸ்க் வச்சுக்குங்க. ஒருவர் உபயோகிச்ச மாஸ்க இன்னொருவர் உபயோகிக்க வேண்டாம்.
இந்த வழிமுறைகள் எல்லாவற்றையும் பின்பற்றி, கொரோனாவை வெற்றிக் கொள்வோம்…நம்மையும், நம் குடும்பத்தையும், நம்மை சுற்றி இருப்பவர்களையும் பாதுகாத்துக் கொள்வோம். இந்த நல்ல விஷயத்தை நாளு பேருக்கு சொல்லுங்க…பாதுகாப்பா இருங்க!!!