பல வருஷமா கஷ்டம்… ஒரே நாள்ள வந்த அதிர்ஷ்டம்… வாழ்க்கையை புரட்டிப் போட்ட நெகிழ்ச்சி சம்பவம்…!!!

Girl winning competition

பஞ்சாபில் பல வருடங்களாக வறுமையில் இருந்த குடும்பத்திற்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் விழுந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் லாட்டரி விற்பனையை அந்த மாநிலமே செய்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் விவசாயமே அடிப்படையாக உள்ளது. இதனால் லாட்டரி விற்பனை மூலம் அதிக வருமானம் பஞ்சாப் மாநிலத்திற்கு கிடைத்துள்ளது.

மேலும் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் வசித்து வருபவர் ரேணு சவுகான் இந்தப் பெண்ணுக்கு லாட்டரி டிக்கெட் வாங்கும் பழக்கம் உண்டு.

அதேபோல் இவர் கடந்த சில நாட்களுக்கு முன் 100 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கினார். ரேணு சவுகான் வாங்கிய லாட்டரி டிக்கெட் களின் குலுக்கல் முடிவுகள் பஞ்சாப் மாநில லாட்டரி விற்பனை துறை வெளியிட்டுள்ளது.

அ தில் ரேணு சவுகான் வாங்கிய d 12228 என்ற நம்பருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக விழுந்தது. இதனை அறிந்த ரேணு சவுகான் ஆச்சரியத்தில் உறைந்து போனார்.

அப்போது அவர் இத்தனை பெரிய தொகை எனக்கு பரிசாக விழுந்ததை என்னால் நம்ப முடியவில்லை எனவும் நான் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாகவும் கூறினார்.

மேலும் லாட்டரி டிக்கெட் வாங்கி நானும் என் குடும்பமும் பல நாள் கஷ்டப்பட்டுள்ளோம் அதற்கு கடவுள் தற்போது பலனை அளித்துள்ளார் என்று ரேணு உணர்ச்சி வசமாக தெரிவித்தார்.

இந்த பரிசுத்தொகையை வைத்து துணி வியாபாரம் செய்யும் என் கணவரின் தொழிலை விரிவுபடுத்தவும் நடுத்தர வர்க்கத்தினரை சேர்ந்த எனக்கு இப்படி ஒரு அதிஷ்டமும் வாய்ப்பு கிடைத்ததை நினைத்து நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார்.

பஞ்சாப் மாநிலம் அந்த லாட்டரி டிக்கெட் மதிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்தது. டிக்கட்டை வாங்கியவர்கள் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு மாநில லாட்டரி விற்பனை துறை தெரிவித்தது. ரேணு சவுகான் தகுந்த ஆவணங்களையும் சமர்ப்பித்தார்.

Exit mobile version