புறப்பட்ட 20 நிமிடங்களில்.. விமானத்தின் மீது லேசர் தாக்குதல்..

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானத்தில் லேசர் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து கடந்த திங்கட்கிழமை அன்று பயணிகள் விமானமான விர்ஜின் அட்லாண்டிக், டெல் அவிவ் புறப்பட்டபோது லேசர் தாக்குதலுக்குள்ளானது. இதனால் ஒரு விமானிக்கு கண்ணில் பார்வை பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து விமானம் புறப்பட்டு சென்ற சுமார் 20 நிமிடங்களில் பிரான்ஸ் தலைநகர் பாரீசை நெருங்கும் சமயத்தில் கட்டுப்பாட்டு அறைக்கு விமான குழுவினரால் அவசர சமிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதன் பிறகு மீண்டும் விமானம் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு சென்றுவிட்டது. விமான நிறுவனம், முன்னெச்சரிக்கைக்காக விமான குழுவினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் தொடர்பாக உள்ளூர் காவல் துறையினர் மற்றும் பிரிட்டன் விமான போக்குவரத்து ஆணையத்திடமும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான போக்குவதற்கு ஆணையத்தினுடைய இணையதள பக்கத்தில், பிரிட்டனில் விமானத்திலோ அல்லது விமானியின் மீதோ லேசர் தாக்குதல் போன்ற எந்த ஒரு தாக்குதல் நடத்தினாலும் அபராதம் அல்லது அதிகபட்சமாக ஐந்து வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. எனினும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதா? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

Exit mobile version