கோடையில் கொடுக்கும் தண்ணீர், கோடி புண்ணியம் செய்வதற்கு சமம்

சுட்டெரிக்கும் கோடை காலம் ஆரம்பமாகி விட்டது. வெயிலை சமாளிக்க குளிர்பானம் தான் குடிக்க வேண்டும் என்றில்லை.

போதுமான அளவுக்கு தண்ணீர் குடித்தாலே வெப்பத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும்.

கோடை வெப்பம் மனிதர்களை மட்டுமல்ல அனைத்து உயிரினங்களையும் வாட்டி வதைக்கும்.

வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் அணில் ஒன்று தண்ணீருக்காக ஏங்கி தவித்தது. அந்த சமயத்தில் ஒரு இளைஞர் தன்னிடம் இருந்த தண்ணீர் பாட்டில் உதவியுடன் அந்த அணிலுக்கு தண்ணீர் கொடுத்துள்ளார்.

தாகத்தில் இருந்த அணில் தயக்கத்துடன் வந்து அவரிடம் தண்ணீர் குடித்துள்ளது. அவரின் கையில் அமர்ந்து தாகம் தீர தண்ணீர் குடித்துவிட்டு பின்னர் அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றுவிட்டது.

இந்த வீடியோவை பதிவிட்டு அந்த இளைஞருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார் இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா.

மேலும் கோடை காலத்தில் இப்படி தண்ணீருக்காக அலையும் விலங்கு மற்றும் பறவைகளுக்கு தண்ணீர் கொடுத்து உதவும் படி கோரிக்கையும் விடுத்துள்ளார்.

ஐந்தறிவு ஜீவன்களுக்கு நம்மால் முடிந்த ஒரு சிறு உதவியை செய்வோம்.

Exit mobile version