அடாவடி செய்த பெண்ணுக்கு பின்னால் இவ்வளவு சோகமா… தஞ்சை நந்தினியின் இன்னொரு முகம்!!

முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் அபராதம் கட்ட முடியாது என கூறி ஆட்சியரையும், போலீசாரையும் ஏக வசனத்தில் பேசிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளம்பெண்ணை மன்னித்து விடுமாறு அவரின் சகோதரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மக்கள் மாஸ்க் அணிந்து வெளியே வர வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில் தஞ்சையில் 26 வயதுடைய பெண் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்தார்.

போலீசார் அவரை மறித்து அபராதம் விதித்த போது, அபராதத்தை கட்ட மாட்டேன் என்றும், ஆட்சியரையும், போலீசாரையும் தரக்குறைவாக பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் அந்த பெண் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு அவர் மீது விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் பன்னீர்செல்வம் என்பவது மகள் நந்தினி என்றும், இளங்கலை பட்டப்படிப்பு முடித்து சென்னையில் பணிபுரிந்ததும் தெரியவந்தது.

தற்போது தஞ்சையில் குடும்பத்தினருடன் வசித்து வரும் பெண் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண்ணிற்கு பைபோலார் டிஸ்ஆர்டர் என்ற நோய் உள்ளதும், அதற்காக சிகிச்சை எடுக்கப்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது.

அவருக்கு கடந்த 3 வருடமாக மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருவதால் கொரோனா குறித்தும், மாஸ்க் சானிடைசர் ஏன் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து அவருக்கு தெரியாது என்றும், ஆட்சியரையும், போலீசாரையும் தரக்குறைவாக பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பதாக நந்தினியின் சகோதரத் ஆம்ஸ்டிராங் போலீசாரிடம் கூறியுள்ளார்.

மேலும் மனிதாபமான அடிப்படையில் என் தங்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அடாவடித்தனமாக நடந்து கொண்ட நந்தினிக்குள் இவ்வளவு பெரிய சோகமா என்றாலும், இப்படிப்பட்டவரிடம் இருசக்கர வாகனம் கொடுத்தது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Exit mobile version