தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த மிக பெரிய கட்சியின் தலைவர் ஸ்டாலின் அவர்கள். தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட தினேஷ் குண்டுராவ், நேற்று முன்தினம் (செப்.,25) திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அங்கு துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு போன்றியவரும் இருந்தனர். இவ்வாறு இருக்க அங்கு ஸ்டாலினும் இருந்தார். இந்நிலையில் அங்கு இருந்த தினேஷ் குண்டுராவிற்கு கொரோன தோற்று தற்போது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து அவர் கூறுகையில் கொரோனா பரிசோதனையில் எனக்கு அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மற்றவர்கள் கொரோனா பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அனைவரின் விருப்பத்திற்கு ஏற்ப நான் விரைவில் குணமடைவேன் என தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் புதிய மேலிட பொறுப்பாளர், தினேஷ் குண்டுராவை வரவேற்க, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி உட்பட 150க்கும் மேற்பட்டோர் சென்னை விமான நிலையம் வந்தனர். தினேஷ் குண்டுராவ் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த போது, அங்கு குழுமியிருந்த ஒட்டுமொத்த காங்கிரசாரும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், ஒருவர் மேல் ஒரவர் உரசியபடி, புதிய பொறுப்பாளரை சூழ்ந்து , மாலை, சால்வைகள் அணிவித்து வரவேற்றனர். காங்கிரசாரில் பலர், முக கவசம் அணியவில்லை. முக கவசம் அணிந்தவர்களும் அதை முறையாக அணியாமல், கழுத்தில் தொங்கவிட்டபடி இருந்தனர். இந்நிலையில் தினேஷ் அவர்களுக்கு கொரோன உறுதி செய்யப்பட்டநிலையில் அனைவரும் பீதியில் உள்ளனர்.




