மாமியாரின் ஆடையில் கிரேவி கொட்டிய வெயிட்டருக்கு மருமகள் கொடுத்த மிகப்பெரிய பரிசு… நெகிழ்ச்சி சம்பவம்…!!

மாமியாரின் ஆடையில் கிரேவி கொட்டிய வெயிட்டருக்கு மருமகள் கொடுத்த மிகப்பெரிய பரிசு நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருமண நிகழ்வில் தனக்கு நிகராக வெள்ளை நிற ஆடையில் இருந்த மாமியாரின் ஆடையில் கிரேவி கொட்டிய வெயிட்டருக்கும் மணமகள் பரிசுத்தொகை கொடுத்துள்ள சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. டிக்டாக் செய்பவரான சோலி  பீ, தான் ஒரு திருமணத்தில் வெய்ட்டாராக பணிபுரிந்தபோது நடந்த கதையை தற்போது வெளியிட்டுள்ளார். பொதுவாக வெளிநாடுகளில் நடைபெறும் கிருத்துவ திருமணங்களில் மணப்பெண் மட்டுமே வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்திருப்பர்.

ஆனால் சோலி  பீ சென்ற திருமணத்தில் மணமகனின் தாயும் வெள்ளை நிறத்தில் ஆடை அணிர்ந்திருந்தார்களாம். முதல் நாள் வேலையில் பதற்றத்தோடு இருந்த சோலி  பீ, தான் கொண்டு வந்த சூடான கிரேவியை வெள்ளை ஆடை அணிந்து வந்த மணமகனின் அம்மா மீது கை தவறி ஊற்றியுள்ளார். மணப்பெண்ணின் மாமியாரின் ஆடை அலங்கோலமாகியுள்ளது. ஆனால் அவருக்கு எந்தவொரு சோதாரமும் ஏற்படவில்லை. பின்பு தனது வீடு அருகே இருந்ததால் மணப்பெண்ணின் மாமியார் உடையினை மாற்றிவிட்டு வேறொரு கலர் உடையில் வந்துள்ளார்.

திருமண நிகழ்ச்சியை நாசப்படுத்தியதாக நினைத்து சோலி  பீ வேதனையில் அழ ஆரம்பித்த போது, மணப்பெண் அவரிடம் வந்து நன்றி தெரிவித்ததோடு, £ 55 யூரோ டொலர்களை டிப்ஸாக வழங்கியுள்ளார். இது இந்திய மதிப்பில் ரூ.55,000. மேலும் மணமகள் கூறுகையில், ‘மணமகளை தவிர்த்து நிகழ்ச்சிக்கு வரும் வேறுயாரும் வெள்ளை ஆடைகள் அணியக்கூடாது’ என சிறித்து கொண்டே சொன்னாராம். இப்போதுகூட, எங்காவது இருவரும் சந்தித்து கொள்ளும் போது ஒருவருக்கொருவர் ‘ஹாய்’ சொல்லி கொள்வோம் என்றும் டிக்டாக் வீடியோவில் சோலி  பீ தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

Exit mobile version