பாராகிளைடிங் பயணத்தில் தொலைந்த சன் கிளாஸ், சிலவினாடிகளில் கிடைத்த அதிசயம்

பாராகிளைடிங் சாகசத்தின் போது அணிந்திருந்த சன் கிளாஸ், கீழேவிழுந்து சில வினாடிகளில் கிடைத்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

துருக்கி நாட்டின் மலைப்பகுதிகளில் பாராகிளைடிங் நிகழ்வு மிகவும் பிரசித்தி பெற்றது. டுபா துர்கெசிவ், பாராகிளைடிங் பயிற்சியாளரான அய்செனுர் கதிர்சியின் உதவியுடன் பாராகிளைடிங் சாகசம் மேற்கொண்டு இருந்தார். இந்த சாகச பயணத்தை அவர் வீடியோ ஆகவும் பதிவு செய்து கொண்டு இருந்தார். தற்போது , இந்த வீடியோ, ஜென்ஜர் என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த வீடியோவில் அப்படி என்ன இருக்கு என்று கேட்டீர்களானால், டுபா துர்கெசிவ், பாராகிளைடிங் சாகச பயணத்தின் போது, சாதாரண கண் கண்ணாடியுடன் எளிதில் மற்றும் தனியாக பொருத்திக் கொள்ளத்தக்க சன் கிளாசை அணிந்து இருந்தார். பயிற்சியாளர் அய்செனர் கதிர்சியுடன் உறவாடியவாறே, அவர் பாராகிளைடிங் சாகச பயணம் மேற்கொண்டு இருந்தார்.

பயணம் இன்னும் சிறிதுநேரத்தில் முடியும் தருவாயில் இருந்தபோது, டுபா துர்கெசிவ் அணிந்திருந்த சன்கிளாஸ் திடீரென்று கீழே விழுந்தது. இதை முதலில் அறியாத டுபா, பின் அதை உணர்ந்து, தனது சன் கிளாஸ் எங்கேயோ விழுந்து விட்டதாக, கதிர்சியிடம் தெரிவித்து கொண்டிருந்த நிலையில், தனது காலின் இடுக்கிலேயே அது கிடைப்பதை கண்டார். உடனடியாக, அது கிடைத்த மகிழ்ச்சியை, டுபா துர்கெசிவ், கதிர்சி உடன் அதை பகிர்ந்து கொண்டார். இவ்வாறாக அந்த வீடியோ முடிவடைகிறது.

இந்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ள நிலையில், இதற்கு பலரும் பல்வேறு விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version