சிலம்பரசன் அறிவித்த ‘மாநாடு’ தீபாவளி!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள ‘மாநாடு’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.



யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தின் ’மெஹ்ரசைலா’ பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. அதற்கு பின்னர் எவ்வித அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்த நிலையில், விமானத்தில் பிரமாண்டமாக இறுதிக்கட்டப் படப்பிடிப்புகள் நடைபெற்று நிறைவடைந்தன.

இந்நிலையில் நடிகர் சிம்பு இன்று காலை 11.25 மணிக்கு மாநாடு திரைப்படத்தின் அப்டேட் ஒன்று வெளியாக இருப்பதாக தனது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்தார். தொடர்ந்து தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ம் தேதி திரைப்படம் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்த மற்றும் தல அஜித்குமாரின் வலிமை ஆகிய திரைப்படங்கள் தீபாவளியை குறி வைத்துள்ளன. தற்போது இந்த ரேஸில் மாநாடு திரைப்படமும் தற்போது இணைந்துள்ளது.

Exit mobile version