வசமாக சிக்கிய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர்… அம்பலமானது பகீர் மோசடி!

venkatachalam

venkatachalam

மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் வெங்கடாசலத்தின் அலுவலகம் மற்றும் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஒய்வு பெற்ற வனத்துறை அதிகாரியான வெங்கடாசலம் 2019ம் ஆண்டிலிருந்து மாசு கட்டுப்பாடு வாரிய தலைவராக பதவி வகித்து வருகிறார். தற்போது பதவியில் இருந்து வரும் அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் எழுந்தது. அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை கிண்டியிலுள்ள அலுவலகம் மற்றும் வேளச்சேரியிலுள்ள வீட்டில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். என்ன மாதிரியான முறைகேடுகளில் எல்லாம் ஈடுபட்டார் என வெங்கடாசலத்திடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இன்றுடன் வெங்கடாசலம் ஓய்வு பெற உள்ள நிலையில் திடீர் ரெய்டுக்கான காரணம் குறித்து பல பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக ஆட்சியில் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க பெரும் தொகையை பெற்றதாக புகார் எழுந்துள்ளது, தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பே அவசர அவசரமாக 52 நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கியதாகவும், ஏப்ரல் மாதத்தில் அவசர கூட்டம் நடத்தி வெங்கடாசலம் ஒப்புதல் வழங்கியதன் பின்னணியில் பெரும் லஞ்சம் கைமாறியதாகவும், அந்த லஞ்ச பணத்தில் வெங்கடாசலம் அளவுக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்ததாகவும் புகார்கள் குவிந்ததை அடுத்தே லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் இறங்கியது அம்பலமாகி வருகிறது.

Exit mobile version