கிராமத்து பெண் கெட்டப்பில் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகை… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்

சார்பட்டா பரம்பரை பட நடிகை துஷாராவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை .

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்தில் துஷாரா, கலையரசன், காளி வெங்கட், தங்கதுரை, சந்தோஷ், பசுபதி, ஜான் விஜயன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கே 9 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி துஷாரா கிராமத்து பெண் கெட்டப்பில் இருக்கும் அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Exit mobile version