வண்ணங்களை கொண்டு எண்ணங்களை ஈர்க்கலாம்.

மென் இன் ரெட்

ட்ரெண்டிங்கான ஆடைகள் அணிந்தேன், நகைச்சுவை ததும்ப பேசினேன் அப்படி இருந்தும் யாரும் என்னை கவனிக்கவில்லை என்ற மனநிலமையில் உள்ளவரா நீங்கள் ? உங்களுக்காகவே சுவாரஸ்யமூட்டும் தகவல்கலுடன் பகுப்பாய்வை வெளியிட்டுள்ளது Personality and Social Psychology என்ற இதழ்.

எண்ணங்கள் அடிப்படையில் எடுக்கப்பட்ட அந்த ஆய்வில் வண்ணங்களை வைத்து எப்படி பெண்களைக் கவர்வது என்று கண்டறிந்துள்ளது.

சிவப்பு நிற ஆடை அணிவதன் மூலம் ஆண் , பெண் இருவருக்கும் இடையே உண்டாகும் ஈர்ப்பை அதிகரிக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆண்கள் சிவப்பு நிற உடை அணிந்தால் , பெண்களின் மனதை கட்டி இழுக்கும், அவர்களை இதுவரை காணாத அளவிற்கு மிக அழகான ஒருவராகவும், வசீகரமானவராகவும், ஆளுமைத் தன்மை கொண்டவராகவும் நினைக்க தோன்றும் எனக் கூறியுள்ளது.

ஆய்வில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் , பெண்களுக்கு சிவப்பு மற்றும் வெள்ளை நிற பேக்கிரவுண்டில் ஆண்களின் புகைப்படத்தை வைத்து எடிட் செய்தது. அதில் சிவப்பு நிற பேக்கிரவுண்ட் கொண்ட ஆண்கள்தான் வசீகரிப்பதாக பெண்கள் கூறியுள்ளனர்.

அதேபோல் சிவப்பு நிற உடையில் இருக்கும் ஆண்களைக் கண்டால் அவர்கள் வறுமையில் இருந்தாலும் ரிச் லுக்கில் , ஹை ஸ்டேடஸ் கொண்டவர்களாகவும் தெரிவதாகக் கூறியுள்ளனர்.

“பெண்கள் சிவப்பு நிறத்தைப் பார்க்கும்போது அது ஆழமான மற்றும் உயிரியல் ரீதியாக ஈர்ப்பை ஒன்றைத் தூண்டுகிறது” என்று ஆய்வின் தலைவர் பேராசிரியர் எலியட் விளக்குகிறார்.

Exit mobile version