மீண்டும் இணையும் கொம்பன் கூட்டணி…. வெளியான தகவல்

கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா கார்த்தியின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவர் நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பாக்கியராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இதை தொடர்ந்து கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கார்த்தியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா இயக்கத்தில் அடுத்ததாக இவர் நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது

இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்க உள்ளதாகவும், ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

முத்தையா மற்றும் கார்த்தியின் கூட்டணியில் வெளியான கொம்பன் திரைப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியை பெற்றது. தற்போது அவர்கள் மீண்டும் இணைந்திருப்பது இப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Exit mobile version