இணையத்தில் வெளியான நீட் தேர்வு ஹால் டிக்கெட்டுகள்… பதிவிறக்கம் செய்யும் வழிமுறை!!

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை, இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூலை 13ஆம் தேதி தொடங்கி கடந்த மாதம் 10ஆம் தேதி முடிவுற்றது. விண்ணப்பித்தவர்களில் சுமார் 16 லட்சம் மாணவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 198 நகரங்களில் இந்தாண்டு நீட் தேர்வுகள் நடைபெறவுள்ளன.
கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ள இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. neet.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று ஹால் டிக்கெட்டினை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
இதேபோல், செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெறயிருக்கும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கும் ஹால் டிக்கெட்டை nbe.edu.in என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

Exit mobile version