துவைத்த துணியை மடித்துக் கொடுக்கவும் வந்தாச்சு மிஷின்…

மனிதர்களின் உடல் உழைப்பை புதுசு, புதுசாக வரும் கருவிகள் வெகுவாகவே குறைத்து வருகிறது. அதிலும் துவைத்த துணியை மடித்து வைக்கக்கூட மிஷின் வந்துவிட்டது என்றால் நம்ப முடிகிறதா? நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

சந்தைக்கு புதிது,புதிதாக கருவிகள் வந்த வண்ணம் இருக்கிறது. அதனால் பெண்களும் ரொம்பவே வேலை குறைந்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். முன்பெல்லாம் குலவிக்கல்லில் அரிசியைப் போட்டு பெண்கள் மாவு அரைத்துக் கொண்டிருந்தனர். காலப்போக்கில் கிரைண்டர் வந்து அந்தக் கவலை தீர்ந்தது. அதேபோல் முன்பெல்லாம் அம்மியில் சட்னிக்கு அரைத்தனர். இப்போது மிக்ஸியில் போட்டு அரைத்துவிடுகின்றனர். இதனால் நேர விரயமும் தவிர்க்கப்படுகிறது.

இதேபோல் பெண்கள் கைவலிக்க துணி துவைத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அந்த வேதனையையும் போக்க வாசிங் மிஷின் வந்தது. இப்போது தமிழகத் தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுகவே, வீட்டுக்கு வீடு வாசிங் மிஷின் கொடுப்போம் என தேர்தல் அறிக்கையிலேயே கொடுத்திருந்தது.

இதோ இப்போது துவைத்த துணியையும் மடித்துவைக்க ஒரு மிஷின் வந்துவிட்டது. வெளிநாட்டில் ஒரு பெண்மணி தன் வீட்டில் அந்த மிஷினை வைத்திருக்கிறார். அதில் அவர் துணியை வைக்க அதை ரொம்ப அழகாக அந்த மிஷின் மடித்துக் கொடுக்கிறது. இதோ நீங்களே அந்த வீடியோவைப் பாருங்களேன்.

blob:https://www.facebook.com/39ec50ff-d162-4a2b-bb3c-fea0e82c17c2

Exit mobile version