சென்னையில் பெய்த அதிகனமழைக்கு காரணம் மேக வெடிப்பா? வானிலை மைய இயக்குனர் புவியரசன் விளக்கம்

சென்னையில் நேற்று நண்பகல் முதல் இரவு 10 மணி வரை கொட்டித்தீர்த்த அதி கனமழைக்கு மேக வெடிப்பு காரணமல்ல என சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்ந்து இதுகுறித்து பேசும் போது, மேக வெடிப்பினால் மழை பெய்தால் அதிக நேரம் மழை பெய்யாது. ஆனால் நேற்று தொடர்ச்சியாக மழை பெய்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவே நேற்று சென்னையில் அதி கனமழை பதிவானது. அதி கனமழையை கணிப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்தன. கணிப்புகளையும் தாண்டி காற்றின் நகர்வு மற்றும் வேகத்தால் மழையின் அளவு மாறுபடக்கூடும். வானிலையை கணிக்க மேலும் பல இடங்களில் ரேடார்களை பொருத்த வேண்டியது அவசியம். நவீன கருவிகளும் தேவை” எனத் தெரிவித்துள்ளார்.

நேற்று பெய்த மழையால் சென்னை நகரின் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியது. வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்துள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

Exit mobile version